» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஜோஸ் பட்லர் அதிரடி: சென்னையை வீழ்த்தி ராஜஸ்தான் த்ரில் வெற்றி!!

சனி 12, மே 2018 10:47:47 AM (IST)பரபரப்பான கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வென்றது. அந்த அணியின் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர், ஆட்டமிழக்காமல் 95 ரன்களை குவித்து வெற்றிக்கு வித்திட்டார்.

சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 43-வது ஆட்டம் வெள்ளிக்கிழமை இரவு ஜெய்ப்பூரில் நடைபெற்றது. 
முன்னதாக டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஷேன் வாட்சன், அம்பட்டி ராயுடு ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இருவரும் அதிரடி ஆட்டத்தை மேற்கொண்டனர். 2 பவுண்டரியுடன் 12 ரன்களை எடுத்த ராயுடு, ஆர்ச்சர் பந்தில் போல்டானார்.

39 ரன்களை எடுத்த வாட்சன், ஆர்ச்சர் பந்துவீச்சில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியாக ஆடிய ரெய்னா 1 சிக்ஸர், 6 பவுண்டரியுடன் 35 பந்துகளில் 52 ரன்களுடன் சோதி பந்துவீச்சில் பின்னியிடம் கேட்ச் தந்து ஆட்டமிழந்தார். 19.3-வது ஓவரில் பில்லிங்ஸ் 27 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டானார். 23 பந்துகளில் 33 ரன்களுடன் தோனியும், 1 ரன்னுடன் பிராவோவும் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு சென்னை அணி 176 ரன்களை எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் ஆர்ச்சர் 2 விக்கெட்டையும், சோதி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 

177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி தரப்பில் ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 11 ரன்களில் ஸ்டோக்ஸ் வீழ்ந்தார். அவரைத் தொடர்ந்து கேப்டன் ரஹானே 4, சஞ்சு சாம்சன் 21, பிரசாந்த் சோப்ரா 8 ரன்களிலும் ஆட்டமிழந்து வெளியேறினர். ஸ்டுவர்ட் பின்னி 22 ரன்களுக்கு பிராவோ பந்தில் ஆட்டமிழந்தார்.

அவருக்கு பின் வந்த கிருஷ்ணப்ப கெளதம் 2 சிக்ஸர் உள்பட 3 பந்துகளில் 13 ரன்கள் அடித்து வில்லி பந்தில் தோனியிடம் கேட்ச் தந்து வெளியேறினார். தொடக்க வீரர் பட்லர் 2 சிக்ஸர், 11 பவுண்டரியுடன் 60 பந்துகளில் 95 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். கடைசி ஓவரில் பட்லர் சிக்ஸர் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இறுதியில் ராஜஸ்தான் 19.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 177 ரன்களை எடுத்து வென்றது. சென்னை தரப்பில் வில்லி, ஹர்பஜன், ஜடேஜா, தாகுர், பிராவோ ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory