» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

நரைன்,தினேஷ் கார்த்திக் அதிரடி பேட்டிங் : பஞ்சாப் அணிக்கு எதிராக கொல்கத்தா அணி வெற்றி

சனி 12, மே 2018 7:52:51 PM (IST)ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் பஞ்சாப் அணியை 31 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி தோற்கடித்தது.

இந்துாரில் இன்று நடைபெற்றஐபிஎல் லீக் போட்டியில் பஞ்சாப்  மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின.இதில் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடிய கொல்கத்தா அணி 13 சிக்ஸர்கள், 24 பவுண்டரிகள் விளாசி கிரிக்கெட் ரசிகர்களுக்கு குதூகலம் அளித்தனர். கொல்கத்தா அணி சார்பாக பேட்டிங் செய்த அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடியதால் நரைன் (75 ரன்கள்) தினேஷ் கார்த்திக் (50 ரன்கள்) 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து ஆடிய பஞ்சாப் அணியில் ராகுல் 66 ரன்களும் (29 பந்துகள்), கேப்டன் அஸ்வின் 45 ரன்கள் (22 பந்துகள்), பிஞ்ச் 34 ரன்கள் (20 பந்துகள்) எடுத்தனர். ஆனால் பிற பேட்ஸ்மென்கள் பெரிய அளவில் சோபிக்காததால் அந்த அணி 20ஓவர்கள் முடிவில் 214 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.இதனால் 31 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி பெற்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd


Tirunelveli Business Directory