» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சன் ரைசர்ஸை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்த சிஎஸ்கே: ராயுடுவுக்கு பயிற்சியாளர் பிளெமிங் புகழாரம்

திங்கள் 14, மே 2018 4:02:36 PM (IST)சன் ரைசர்ஸை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்குள் நுழைந்தது சிஎஸ்கே. அதிரடியாக ஆடி சதம் அடித்த ராயுடுவுக்கு பயிற்சியாளர் பிளெமிங் புகழாரம் சூட்டியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பியை சிறிது காலம் தன் வசம் வைத்திருந்த ராயுடு மிகவும் நேர்மைத்திறத்துடன் ஆடி வருகிறார், 535 ரன்களை எடுத்து பட்டியலில் 4வதாக உள்ளார். நேற்று 62 பந்துகளில் 7 பவுண்டரிகள் 7 சிக்சர்களுடன் 100 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக்த் திகழ்ந்தார். இந்த ஐபிஎல் தொடரில் சென்னையின் வெற்றிக்கு பெரிதளவு பங்கு செலுத்துபவர் ராயுடுதான்.

இந்நிலையில் ஆட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் பேசிய சி.எஸ்.கே. பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் கூறியதாவது: அட்டவணையில் டாப் இடத்துக்கு அருகில் இருக்கிறோம் என்றால் அதற்கு முக்கியக் காரணம் ராயுடுதான். ரன் அட்டவணையில் அவர் ஆதிக்கம் செலுத்துவதில் ஆச்சரியமில்லை, ஆனால் அவர் அந்த ரன்களை எடுத்த விதம் அதைவிட ஆச்சரியமானது. பாசிட்டிவாக ஆடுகிறார், மற்றவர்கள் மீது வெகுவிரைவில் தாக்கன் செலுத்துபவராக உள்ளது அவரது ஆட்டம்.

ஐபிஎல்-ஐ வெல்ல வேண்டுமென்றால் டாப் ஆர்டரில் அவரைப்போல் ஓரிவு வீரர்கள் அவசியம். இப்போதைக்கு ராயுடு இதனைச் செய்து வருகிறார். மற்றவீரர்களில் ஷேன் வாட்சன், ரெய்னா, தோனி, ஆகியோர் வலுவாக பங்களிப்பு செய்கின்றனர், ஆனால் கண்டிப்பாக இந்த விஷயத்தில் ராயுடு ஒரு முன்னணி வழிகாட்டியாக உள்ளார். இவருடைய பார்ம் தொடர வேண்டும், அவர் கூடவே மற்றவர்களும் செல்ல வேண்டும். இவ்வாறு கூறினார் பிளெமிங். ஐபிஎல் தொடங்கிய 2008 முதல் நடப்பு ஐபிஎல் வரை 8 சீசன்களில் சிஎஸ்கே பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. இருமுறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd

Tirunelveli Business Directory