» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஜோஸ் பட்லர் அதிரடி: மும்பையை வென்றது ராஜஸ்தான்

திங்கள் 14, மே 2018 4:13:11 PM (IST)ஜோஸ் பட்லர் அதிரடி ஆட்டம் காரணமாக மும்பையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான். 

மும்பை இண்டியன்ஸ், ராஜஸ்தான் ராயல் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 47-வது ஆட்டம் நேற்று இரவு மும்பையில் நடைபெற்றது. டாஸ் வென்ற ராஜஸ்தான் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து மும்பை அணியின் எவின் லெவிஸ், சூர்யகுமார் யாதவ் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் தொடக்க முதலே அடித்து ஆடத் தொடங்கினர். 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி மும்பை 80 ரன்களை எடுத்திருந்தது. 

சூரியகுமார் யாதவ் 38 ரன்களுடனும், கேப்டன் ரோஹித் சர்மா ரன் ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயும் ஆட்டமிழந்தனர். லெவிஸ் 60 ரன்களுக்கு குல்கர்னி பந்துவீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார். 12 ரன்களுடன் இஷான், 3 ரன்களுடன் க்ருணால் பாண்டியா, 31 ரன்களுடன் ஹார்திக் பாண்டியா ஆகியோர் ஆட்டமிழந்து வெளியேறினர். பென் கட்டிங் 10 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து மும்பை 168 ரன்களை எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் ஆர்ச்சர், ஸ்டோக்ஸ் தலா 2 விக்கெட்டையும், உனதிகட், குல்கர்னி தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி சார்பில் ஆர் சி ஷார்ட், ஜோஸ் பட்லர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஆனால் ஷார்ட் 4 ரன்களுக்கு பும்ரா பந்தில் வீழ்ந்தார். பின்னர் கேப்டன் ரஹானே-பட்லர் இணை அணியின் ஸ்கோரை உயர்த்தியது. ரஹானே 37 ரன்களிலும், சஞ்சு சாம்சன் 26 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். ஜோஸ் பட்லர் 5 சிக்ஸர், 9 பவுண்டரியுடன் 53 பந்துகளில் 94 ரன்களை குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இறுதியில் 18 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களுடன் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் ஹார்திக் பாண்டியா 2 விக்கெட்டையும், பும்ரா 1 விக்கெட்டையும் எடுத்தனர்.  இந்த வெற்றி மூலம் புள்ளிகள் பட்டியலில் ராஜஸ்தான் 5-வது இடத்துக்கு முன்னேறியது. மும்பை 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd


Tirunelveli Business Directory