» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஒருநாள் ஆட்டத்தில் 490 ரன்கள் குவிப்பு: நியூஸிலாந்து மகளிர் அணி புதிய உலக சாதனை!

சனி 9, ஜூன் 2018 3:50:27 PM (IST)அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் 490 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்துள்ளது நியூஸிலாந்து மகளிர் அணி. 
 
டப்ளினில் நடைபெற்ற முதல் ஒருநாள் ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஆரம்பம் முதல் நியூஸிலாந்து வீராங்கனைகள் அதிரடியாக விளையாடினார்கள். தொடக்க வீராங்கனையும் கேப்டனுமான பேட்ஸ் 94 பந்துகளில் 2 சிக்ஸர், 24 பவுண்டரிகளுடன் 151 ரன்கள் எடுத்து அசத்தினார். க்ரீன் 77 பந்துகளில் 121 ரன்களும் கெர் 45 பந்துகளில் 81 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரைப் பெருமளவு உயர்த்தி உலக சாதனை படைக்க உதவினார்கள். 

இதையடுத்து 50 ஓவர்களில் நியூஸிலாந்து மகளிர் அணி, 4 விக்கெட் இழப்புக்கு 490 ரன்கள் எடுத்தது. அயர்லாந்தின் கரா முர்ரே 10 ஓவர்கள் வீசி 119 ரன்கள் கொடுத்தார். இதுவும் உலக சாதனைதான். ஆடவர், மகளிர் என இரு தரப்பு ஒருநாள் கிரிக்கெட் ஆட்டங்களிலும் இவ்வளவு ரன்களை யாரும் கொடுத்ததில்லை. கடினமான இலக்கைத் துளியும் சமாளிக்க முடியாமல் 35.3 ஓவர்களில் 144 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது அயர்லாந்து மகளிர் அணி. இதனால் 346 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து மகளிர் அணி முதல் ஒருநாள் ஆட்டத்தை வென்றது. 

இந்த ஆட்டம் அந்த அணி வீராங்கனைகளுக்கு மறக்கமுடியாத ஒன்றாக அமைந்துவிட்டது.   ஆடவர் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இதுவரை எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் - 444/3. 2016-ல் பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து எடுத்தது. மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் - 455/5. 1997-ல் பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிராக நியூஸிலாந்து எடுத்தது. இந்த இரு சாதனைகளும் தற்போது முறியடிக்கப்பட்டுள்ளன. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory