» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

உலகக்கோப்பை கால்பந்து : காலிறுதிக்கு தகுதி பெற்ற அணிகள்

திங்கள் 2, ஜூலை 2018 8:43:24 PM (IST)

ரஷ்யாவில் நடந்து வரும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.இதில் நாக்-அவுட் சுற்றுகள் நடைப்பெற்று வருகின்றன. இதிலிருந்து காலிறுதிப் போட்டிக்கு தகுதிப் பெற்ற அணிகள் விபரம் வருமாறு

நாக் அவுட் சுற்று முடிவுகள்படி பிரான்ஸ் - அர்ஜெண்டினா அணிகள் மோதிய போட்டியில், பிரான்ஸ் 4-3 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.உருகுவே - போர்ச்சுக்கல் அணிகள் மோதிய போட்டியில், உருகுவே 2-1 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.ஸ்பெயின் - ரஷ்யா அணிகள் மோதிய போட்டியில், ரஷ்யா பெனால்டி ஷூட் அவுட் முறையில் 4-3 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

குரேஷியா - டென்மார்க் அணிகள் மோதிய போட்டியில், குரேஷியா பெனால்டி ஷூட் அவுட் முறையில் 3-2 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.முதல் நான்கு போட்டியில் பிரான்ஸ், உருகுவே, ரஷ்யா, குரேஷியா ஆகிய அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.காலிறுதியில் பிரான்ஸ் - உருகுவே அணிகள் ஜூலை 6ம் தேதியும்,ரஷ்யா - குரேஷியா அணியுடன் ஜூலை 7ம் தேதியும் மோத உள்ளன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory