» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஜூலை மாதம் பிறந்திடு,இந்தியஅணி கேப்டன் ஆகிடு : சேவாக் ட்வீட்

திங்கள் 9, ஜூலை 2018 8:39:41 PM (IST)

ஜூலை மாதம் பிறந்திடு இந்தியஅணி கேப்டன் ஆகிடு என வீரேந்திர சேவாக்,ட்வீட் செய்துள்ளார்.

இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க வீரர் சேவாக்கின் ட்வீட்களும் அதிரடியாய் அமைவது உண்டு. இதனாலேயே அவருக்கு சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.இந்நிலையில் தற்போது சேவாக் பதிவிட்டுள்ள ட்விட்டில், ஜூலை மாதம் இந்திய கிரிக்கெட் அணிக்கு மிகச் சிறப்பான மாதமாகும். இந்த மாதத்தில் அடுத்தடுத்த நாட்களில் பிறந்த (ஜூலை 7) மகேந்திர சிங் தோனி, (ஜூலை 8) சௌரவ் கங்குலி ஆகியோர் இந்திய அணியின் மாபெரும் கேப்டன்களாக செயல்பட்டவர்கள். 

அதுபோல ஜூலை 10-ஆம் தேதியும் மற்றொரு ஜாம்பவான் வீரரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான சுனில் கவாஸ்கர் பிறந்த தினம்.அது போல் விடுபட்ட ஜூலை 9-ஆம் தேதியை மையப்படுத்தி விரேந்திர சேவாக், ட்வீட் செய்துள்ளார். அதில் எதிர்காலத்தில் இந்தியஅணிக்கு கேப்டனாக பொறுப்பேற்க உள்ள யாரோ ஒருவர் தனது பிறந்தநாளை கொண்டாடி கொண்டிருப்பார் என்றார்.

 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Tirunelveli Business Directory