» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டி.என்.பி.எல். : சூப்பர் ஓவரில் கோவை அணி வெற்றி

திங்கள் 16, ஜூலை 2018 12:01:08 PM (IST)

டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்றிரவு நெல்லையில் நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் கோவை அணி சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது.

டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு நெல்லையில் நடந்த 5-வது லீக் ஆட்டத்தில் கோவை கிங்சும், காரைக்குடி காளையும் மோதின. முதலில் பேட் செய்த காரைக்குடி அணி 7 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது.அடுத்து களம் இறங்கிய கோவை அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷாருக்கான் (32 ரன்), கேப்டன் அபினவ் முகுந்த் (59 ரன்) அசத்திய போதிலும் இறுதிகட்டத்தில் தடுமாறியது. 

கடைசி ஓவரில் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட போது 2 விக்கெட்டுகளை பறிகொடுத்து 9 ரன்களே எடுக்க முடிந்தது. கோவை அணியும் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்ததால் ஆட்டம் டை (சமன்) ஆனது. இதையடுத்து சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் கோவை அணி 6 பந்தில் 14 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு ஆடிய காரைக்குடி அணி 9 ரன்களே எடுத்தது. கோவை பந்து வீச்சாளர் நடராஜன் அவர்களை கட்டுப்படுத்தி தங்கள் அணிக்கு வெற்றியை தேடித்தந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory