» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

அஸ்வின், ஷமி அசத்தல்: முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 287 ரன்னில் ஆல்அவுட்

வியாழன் 2, ஆகஸ்ட் 2018 4:11:45 PM (IST)



இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 287 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. 

இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நேற்று தொடங்கியது. முதல்நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 88 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்திருந்தது. தொடக்க வீரர் ஜென்னிங்ஸ் 42 ரன்களும், ஜோ ரூட் 80 ரன்களும், பேர்ஸ்டோவ் 70 ரன்களும் அடித்தனர். சாம் குர்ரான் 24 ரன்னுடனும், ஜேம்ஸ் ஆண்டர்சன் ரன்ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. முதல் ஓவரை அஸ்வின் வீசினார். ஜேம்ஸ் ஆண்டர்சன் எதிர்கொண்டார். இந்த ஓவரில் ஆண்டசர்ன் இரண்டு ரன்கள் சேர்த்தார்.

அடுத்த ஓவரை முகமது ஷமி வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் சாம் குர்ரான் தினேஷ் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 89.4 ஓவர்கள் விளையாடி 287 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இன்று 10 பந்துகள் சந்தித்த இங்கிலாந்து இரண்டு ரன்கள் எடுத்து கடைசி விக்கெட்டை இழந்தது. இந்திய அணி சார்பில் அஸ்வின் நான்கு விக்கெட்டுக்களும், முகமது ஷமி 3 விக்கெட்டுக்களும் கைப்பற்றினார்கள். இங்கிலாந்து ஆல்அவுட் ஆனதைத் தொடர்ந்து இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory