» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஒரே கேப்டன் கீழ் விரைவாக 200 விக்கெட்: வார்னே சாதனையை சமன் செய்தார் அஸ்வின்

சனி 4, ஆகஸ்ட் 2018 5:37:07 PM (IST)



விராட் கோலி தலைமையின் கீழ் 200 விக்கெட்டுக்கள் வீழ்த்தி, சர்வதேச அளவிலான சாதனையில் வார்னே உடன் இணைந்துள்ளார் அஸ்வின். 

இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். முதல் இன்னிங்சில் நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்தி இங்கிலாந்தை 287 ரன்னுக்குள் சுருட்ட முக்கிய காரணமாக இருந்தார். 2-வது இன்னிங்சிலும் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். முதல் மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தி இங்கிலாந்து திணற காரணமாக இருந்தார். இரண்டு இன்னிங்சிலும் 7 விக்கெட் வீழ்த்திய அஸ்வின் விராட் கோலி தலைமையின் கீழ் 200 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.

ஒரு கேப்டன் தலைமையின் கீழ் 200 விக்கெட்டுக்கள் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்ற அஸ்வின், சர்வதேச அளவில் விரைவாக வீழ்த்திய 2-வது வீரர் என்ற பெருமையை ஷேன் வார்னே உடன் பகிர்ந்துள்ளார். சனத் ஜெயசூர்யா தலைமையின் கீழ் முத்ததையா முரளீதரன் 30 போட்டியில் இந்த சாதனையைப் படைத்து முதல் இடத்தில் உள்ளார். வார்னே ரிக்கி பாண்டிங் தலைமையின் கீழ், அஸ்வின் விராட் கோலி தலைமையின் கீழ் 34 போட்டியில் இந்த சாதனையைப் படைத்துள்ளனர். மால்கம் மார்ஷல் விவியன் ரிச்சர்ட்ஸ் தலைமையின் கீழ், ஆலன் டொனால்டு குரோஞ்ச் தலைமையின் கீழ், டேல் ஸ்டெயின் ஸ்மித் தலைமையின் கீழ் 40 போட்டியில் 200 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 3-வது இடத்தில் உள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads







Tirunelveli Business Directory