» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கருணாநிதி மறைவு எதிரொலி: டிஎன்பிஎல் ஆட்டங்கள் ஒத்தி வைப்பு

புதன் 8, ஆகஸ்ட் 2018 12:21:39 PM (IST)

தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான மு.கருணாநிதி மறைவையொட்டி டிஎன்பிஎல் ஆட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம்-சங்கர் சிமெண்ட் சார்பில் டிஎன்பிஎல் ஆட்டங்கள் திருநெல்வேரி, திண்டுக்கல்லில் நடந்து வருகின்றன. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை திண்டுக்கல் டிராகன்ஸ்-மதுரை பேந்தர்ஸ் அணிகள் இடையிலான குவாலிபையர் 1 ஆட்டம் நடப்பதாக இருந்தது. 

ஆனால் மாலையில் கருணாநிதி மறைந்ததாக அறிவிக்கப்பட்டதை அடுத்து நேற்று இரவு நடப்பதாக இருந்த குவாலிபையர் 1 ஆட்டம் ஒரு பந்து கூட வீசாத நிலையில் ஒத்தி வைக்கப்பட்டது. அதே போல் இன்று (புதன்கிழமை) நடைபெறுவதாக இருந்த கோவை-காரைக்குடி அணிகள் இடையிலான எலிமினேட்டர் ஆட்டமும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என டிஎன்பிஎல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Tirunelveli Business Directory