» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கரீபியன் பிரீமியர் லீக் டி20: 40 பந்துகளில் சதம் & ஹாட்ரிக்: அசத்திய ரஸ்ஸல்!

சனி 11, ஆகஸ்ட் 2018 4:34:43 PM (IST)போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நேற்று நடைபெற்ற கரீபியன் பிரீமியர் லீக் டி20 ஆட்டத்தில் 40 பந்துகளில் சதம் மற்றும் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் ரஸ்ஸல்.

டாஸ் வென்ற ஜமைக்கா டல்லவாஸ், டிரின்பேகோ நைட் ரைடர்ஸ் அணியைப் பேட்டிங் செய்யச் சொன்னது. அந்த அணி 20 ஓவர்களில் 223 ரன்களைக் குவித்தது. மன்ரோ 61, மெக்கல்லம் 56 ரன்கள் எடுத்தார்கள். மொத்தம் 14 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டன. கடைசி ஓவரை வீசிய ரஸ்ஸல், ஹாட்ரிக் விக்கெட்டுகள் எடுத்தார். 

கடினமான இலக்கை எதிர்கொண்ட ஜமைக்கா அணி, ஒருகட்டத்தில் 6.1 ஓவர்களில் 41 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. அந்தக் கணத்தில் ஆட்டம் ஒருபக்கமாகவே இருந்தது. ஆனால் அதன்பிறகு களமிறங்கிய ரஸ்ஸல் நிகழ்த்தியது அற்புதம். ரசிகர்களுக்குத் திகட்டாத விருந்து படைத்தார். இத்தனைக்கும் அவர் சந்தித்த முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்தும் எதிரணி தவறவிட்டது. கிடைத்த வாய்ப்பை அதன்பிறகு நன்குப் பயன்படுத்திக்கொண்டார் ரஸ்ஸல்.

முதல்முறையாக கேப்டனாக இந்த ஆட்டத்தில் களமிறங்கிய ரஸ்ஸல், 22 பந்துகளில் அரை சதமெடுத்தார். 2016-ல், 42 பந்துகளில் ரஸ்ஸல் சதமடித்ததே சிபிஎல் போட்டியின் அதிவேக சதமாக இருந்தது. தன்னுடைய சாதனையை நேற்று முறியடித்தார் ரஸ்ஸல். 17-வது ஓவரில் 40 பந்துகளில் சதமடித்து சாதனை செய்தார். அப்போதும் கூட அவருடைய அணி வெற்றி பெற 21 பந்துகளில் 40 ரன்கள் தேவைப்பட்டன. 

மேலும், ரஸ்ஸலும் லூயிஸும் 6-வது விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்து டி20 கிரிக்கெட்டில் 6-வது விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் என்கிற சாதனையைச் செய்தார்கள். இதற்கு முன்பு, இங்கிலாந்து டி20 உள்ளூர் போட்டியில் 6-வது விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுக்கப்பட்டன. இந்தச் சாதனையை இருவரும் முறியடித்துள்ளார்கள். கென்னர் லூயிஸ் 51 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு கடினமான இலக்கை ஜமைக்கா அணி 19.3 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்து நம்பமுடியாத வெற்றியை அடைந்தது.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory