» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டி: இங்கிலாந்துக்கு நெருக்கடியளிக்கும் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள்

சனி 11, ஆகஸ்ட் 2018 6:21:14 PM (IST)

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்தியாவை 107 ரன்களில் சுருட்டிய இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் விரைவாக 4 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்து வருகிறது.

இன்று இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்ஸ் தொடர்ந்தது. முதல் டெஸ்டில் சொதப்பிய குக், நம்பிக்கையுடன் ஆட்டத்தைத் தொடங்கினார். ஜென்னிங்ஸ் 11 ரன்களில் ஷமி பந்துவீச்சில் எல்பி டபிள்யூ ஆகி வெளியேறினார். அடுத்த ஓவரில் 21 ரன்களில் குக் விக்கெட்டை வீழ்த்தினார் இஷாந்த் சர்மா. இதன்பிறகு கேப்டன் ரூட்டும் அறிமுக வீரர் போப்பும் இந்தியப் பந்துவீச்சை நன்கு எதிர்கொண்டார்கள். 

எனினும் பாண்டியாவின் பந்துவீச்சில் 28 ரன்களில் ஆட்டமிழந்தார் போப். 25-வது ஓவரில் கேப்டன் குக்கை அற்புதமான பந்துவீச்சினால் வெளியேற்றினார் ஷமி. இதனால் 3-ம் நாள் உணவு இடைவேளையின்போது இங்கிலாந்து அணி, 24.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 89 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணி 18 ரன்களே பின்தங்கியுள்ள நிலையில், கைவசம் 6 விக்கெட்டுகள் உள்ளன. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி அதிக ரன்கள் எடுத்துவிடாதபடி இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து நெருக்கடியளித்து வருகிறார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory