» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்திய அணி படுதோல்வி: கோலி, ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கேட்க பிசிசிஐ திட்டம்!!

செவ்வாய் 14, ஆகஸ்ட் 2018 11:59:38 AM (IST)இங்கிலாந்தில் 2 டெஸ்ட் ஆட்டங்களில் இந்தியா தோல்வியடைந்த நிலையில் இதுதொடர்பாக கேப்டன் விராட் கோலி, தலைமைப் பயிற்சியாளர் ரவிசாஸ்திரியிடம் விளக்கம் கோர பிசிசிஐ திட்டமிட்டுள்ளது.

இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து வரும் இந்திய அணி டி 20 தொடரில் வென்று, ஒரு நாள் போட்டித் தொடரை இழந்தது. பின்னர் டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் நிலையில், பர்மிங்ஹாமில் நடந்த முதல் டெஸ்டில் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கேப்டன் கோலி அபார சதமடித்தும் இதர வீரர்கள் சரிவர ஆடாததால் தோல்வியடைந்தது. அதன் தொடர்ச்சியாக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டிலும் 1 இன்னிங்ஸ், 159 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா படுதோல்வியடைந்தது. 

இந்திய பேட்ஸ்மேன்கள் சரிவர ஆடாமல் சொதப்பியதால் தோல்வி நேரிட்டதாக பல்வேறு தரப்பினர் கண்டித்து வருகின்றனர். போராட்டக் குணம் இல்லாமல் இங்கிலாந்திடம் சரண் அடைந்து விட்டனர் என சாடி வருகின்றனர். இந்நிலையில் கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் கேள்வி எழுப்ப பிசிசிஐ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அடுத்த மூன்றாவது டெஸ்டில் வெற்றி பெற என்ன உத்தி, வியூகம் கடைபிடிக்கப் போகிறீர்கள். அணி வீரர்கள் தேர்வில் கோலி, சாஸ்திரிக்கு வானாளாவிய அதிகாரம் தரப்பட்டுள்ள நிலையில் 2 டெஸ்ட் தோல்வியால் அவர்களிடம் கேள்வி எழுப்பப்பட உள்ளது. தொடரில் தோல்வியுற்றால் இருவருக்கும் தரப்பட்டுள்ள அதிகாரம் குறைக்கப்படும். 

பிசிசிஐ நிர்வாக வட்டாரங்கள் கூறியதாவது: இருவரிடம் கேட்டுக் கொண்டு தான் வெள்ளை நிற பந்து பயிற்சி ஆட்டங்கள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு ஆட்டத்துக்கும் போதிய அவகாசம் இல்லை என புகார் கூற முடியாது. முந்தைய தென்னாப்பிரிக்க தொடரில் போதிய அவகாசம் இல்லாததால் தோல்வியடைந்தோம் என வீரர்கள் கூறியிருந்தனர். ஏற்கெனவே சாஸ்திரி பயிற்சியில் 2014-15-இல் 0-2 ஆஸ்திரேலியாவிலும், 2017-18-இல் தென்னாப்பிரிக்காவில் 1-2 என தொடரை இழந்தோம். தற்போது இங்கிலாந்தில் இக்கட்டான நிலையில் உள்ளோம். 

பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோர் செயல்பாடுகளும் கேள்விக்குறியாக உள்ளன. ஸ்ரீதர் பொறுப்பேற்ற பின் இதுவரை இந்திய அணி 50 கேட்சுகளை தவற விட்டுள்ளனர். பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் நியமிக்கப்பட்டு 4 ஆண்டுகள் ஆகியும் வெளிநாட்டு சுற்றுப் பயணங்களில் பேட்டிங்கை எதிர்கொள்ள வீரர்களை உத்வேகப்படுத்தவில்லை. 

இந்திய அணி சுற்றுப்பயணத்தின் போது தேசிய தேர்வாளர் குழுவைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் கட்டாயம் உடன் செல்ல வேண்டும் என கவாஸ்கர் கூறியுளளார். 18-ஆம் தேதி தொடங்கும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு கேப்டன் கோலி முழு உடல்தகுதியுடன் இருப்பாரா என்ற அச்சம் எழுந்துள்ளது. உதவி கேப்டனாக உள்ள ரஹானே சரிவர ஆடாத நிலையில் அஸ்வின்கேப்டனாக நியமிக்கப்படும் வாய்ப்பு உள்ளது எனத்தெரிவித்தன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory