» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்திய அணிக்குத் தேர்வாகாதது குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் வருத்தம்!

செவ்வாய் 14, ஆகஸ்ட் 2018 3:57:11 PM (IST)

இந்திய கிரிக்கெட் அணிக்குத் தேர்வாகாதது குறித்து இளம் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

பர்மிங்ஹாமில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற நிலையில் இரண்டாம் டெஸ்ட் லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 9-ம் தேதி தொடங்கியது. இந்த டெஸ்டில் இந்தியா 1 இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. 

இன்றைய தேதியில் மயங்க் அகர்வால், பிருத்வி ஷா, விஹாரி போன்றோரை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதற்கு முன்பு ஷ்ரேயாஸ் ஐயருக்கு இதுபோன்று பலரும் ஆதரவுக்குரல் எழுப்பினார்கள். எனினும் ஸ்ரேயாஸ் ஐயரால் இந்திய அணிக்குள் நுழைந்து முத்திரை பதிக்கமுடியவில்லை. இதை அவர் எப்படி உணர்கிறார்?

பொறுமையைக் கடைப்பிடிப்பது கடினமாக உள்ளது. சிறப்பாக விளையாடி, ரன்கள் குவித்தாலும் இந்திய அணிக்குத் தேர்வாகாமல் இருப்பது அது உங்களை மனத்தளவில் பாதிக்கிறது. தரமான வேகப்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும்போது உங்கள் பங்களிப்பு தடுமாற்றத்தைக் காண்கிறது. இதை எதிர்கொண்டு கவனம் செலுத்த வேண்டியுள்ளது. என்று கூறியுள்ளார். ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய ஏ அணி, தென் ஆப்பிரிக்க ஏ அணியை 1-0 என டெஸ்ட் தொடரில் தோற்கடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads
Tirunelveli Business Directory