» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தினேஷ் கார்த்திக்கைத் தூக்க வேண்டும்; ரிஷப் பண்ட்டை சேர்க்க வேண்டும்: கங்குலி யோசனை

செவ்வாய் 14, ஆகஸ்ட் 2018 4:29:22 PM (IST)

ரிஷப் பண்ட்டை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் தினேஷ் கார்த்திக்கைத் தூக்க வேண்டும் என்று கங்குலி கூறியுள்ளார்.

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 2 நாட்களில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்ததையடுத்து இந்திய அணி மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.விராட் கோலிக்கு லேசான முதுகுவலி இதனால் 5ம் நிலையில் களமிறங்கினார். அடுத்த போட்டிக்குள் சரியாகி விடும் என்கிறார். 

இந்நிலையில் இந்திய அணி தைரியமாக அடித்து ஆட வேண்டும் என்று கூறும் தாதா கங்குலி. ரிஷப் பண்ட்டை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் தினேஷ் கார்த்திக்கைத் தூக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது: இந்திய வீரர்கள் ஆட்டமிழந்த விதம் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது. இன்னும் மோசம் என்னவெனில் இன்னும் 3 டெஸ்ட் போட்டிகள் உள்ளன. இந்திய வீரர்கள் எப்படி தங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப் போகிறார்கள் என்று தெரியவில்லை. வேண்டுமானால் ஷிகர் தவனை மீண்டும் அணியில் சேர்ப்பார்கள்.

புஜாராவிடம் பேசலாம், அவர் மட்டுமே 70 பந்துகள் நின்றார், ஆனால் அணிக்குத் தேவை ரன்கள். அழுத்தத்தையும் சுமையையும் குறைக்க வேண்டுமெனில் வெறுமனே நிற்பது மட்டும் போதாது, ரன்கள் தேவை. அடித்து ஆடினால்தான் எதிர்முனையில் இருக்கும் பேட்ஸ்மெனுக்கும் தன்னம்பிக்கை வரும். ரிஷப் பண்ட் அணிக்கு வர வேண்டும், தினேஷ் கார்த்திக் மிக மோசமான பார்மில் இருக்கிறார். காலையில் நான் வலைப்பயிற்சியில் கார்த்திக் பேட் செய்ததைப் பார்த்தேன். வலையில் கூட அவரால் பந்துடன் மட்டையை தொடர்பு படுத்த முடியவில்லை. மேலும் ஒரு இடது கை வீரர் அணிக்குத் தேவை, இந்திய அணியின் தோல்விகள் ரிஷப் பண்ட்டை பாதித்திருக்காது. மேலும் அவர் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர். இவ்வாறு கூறினார் சவ்ரவ் கங்குலி.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory