» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

அஜித் வடேகர் மறைவு: சச்சின் தெண்டுல்கர் இரங்கல்

வியாழன் 16, ஆகஸ்ட் 2018 5:03:30 PM (IST)

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் மறைவுக்கு சச்சின் தெண்டுல்கர் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜித் வடேகர் உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் நேற்றிரவு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 77. 

அஜித் வடேகர் இந்திய அணிக்காக 37 டெஸ்டுகளில் ஆடி 2,113 ரன்கள் சேர்த்துள்ளார். இரண்டு ஒரு நாள் போட்டிகளிலும் விளையாடி இருக்கிறார். அவரது தலைமையில் இந்திய அணி 1971-ம் ஆண்டு இங்கிலாந்து (1-0) மற்றும் வெஸ்ட் இண்டீசில் (1-0) டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி வரலாறு படைத்தது. அவரது மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வாரியமும், கிரிக்கெட் வீரர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வடேகரின் மறைவு குறித்து சச்சின் கூறியதாவது: வடேகர் காலமானார் என்கிற செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். 90களில் அணி வீரர்களின் திறமைகளை வெளிக்கொணருவதில் முக்கியப் பங்காற்றினார். அவருடைய அறிவுரைகளுக்கும் ஆலோசனைகளுக்கும் எப்போதும் நன்றிக்கு உரியவர்களாக இருப்போம். இக்கடினமான நேரத்தில் அவருடைய குடும்பத்தினர் துயரத்தைத் தாங்கும் சக்தியுடன் இருக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd






Tirunelveli Business Directory