» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தோனி உள்ளூர் போட்டிகளில் ஆடவேண்டும்: சுனில் கவாஸ்கர்

வெள்ளி 28, செப்டம்பர் 2018 5:14:05 PM (IST)

எம்எஸ் தோனி தனது பழைய ஆட்டத்திற்கு திரும்பி உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
    
இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திர சிங் தோனி. கேப்டன் பதவியில் இருந்து விலகிய தோனி, தற்போது ஒருநாள் மற்றும் டி-20 போட்டியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார். 2018 ஐபிஎல் தொடரில் எம்எஸ் தோனி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் சர்வதேச போட்டிகளில் பெரிய அளவில் சாதிக்கவில்லை. எம்எஸ் தோனி தனது பழைய ஆட்டத்திற்கு திரும்பி உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

இதுகுறித்து சுனில் கவாஸ்கர் கூறுகையில் ‘‘எம்எஸ் தோனி கட்டாயம் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் விளையாட வேண்டும். நான்கு நாட்கள் கொண்ட உள்ளூர் தொடரில் விளையாடினால், வளர்ந்து வரும் ஜார்க்கண்ட் வீரர்களுக்கு அது உதவிகரமாக இருக்கும். 50-வது ஓவர் கிரிக்கெட்டில் குறைந்த வாய்ப்புகள்தான் கிடைக்கும். ஆனால் நான்கு நாட்கள் கொண்ட  போட்டியில் விளையாடினால் நீண்ட இன்னிங்ஸ் விளையாட வாய்ப்பு கிடைக்கும். அது ஒருநாள் போட்டிக்கு பயன்படும்’’ என்றார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory