» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் : இந்திய அணியில் பிருத்வி ஷா அறிமுகம்!

புதன் 3, அக்டோபர் 2018 11:31:33 AM (IST)வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிரா நாளை துவங்கும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் பிருத்வி ஷா இடம்பெற்றுள்ளார். 

இந்தியா - வெஸ்ட் இன்டீஸ்  அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நாளை தொடங்குகிறது. முதல் டெஸ்ட் ராஜ்கோட்டில் நாளை 4-ம் தேதியும், 2வது டெஸ்ட் 12-ம் தேதி ஹைதராபாத்திலும் நடைபெறவுள்ளன. ஆசியக் கோப்பை போட்டி ஓய்வுக்கு பின் மீண்டும் அணியில் இணைந்துள்ளார் கேப்டன் விராட் கோலி. நாளை விளையாடவுள்ள இந்திய அணியின் 12 பேர் கொண்ட பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. 

தொடக்க வீரர்களாக ராகுலும் பிருத்வி ஷாவும் விளையாடவுள்ளார்கள். இதன் மூலம் பிருத்வி ஷா டெஸ்ட் வீரராக அறிமுகமாகவுள்ளார். அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ் என மூன்று சுழற்பந்துவீச்சாளர்கள் விளையாட அதிக வாய்ப்புள்ளது. ஒருவேளை இரண்டு சுழற்பந்து வீச்சாளர்கள் விளையாடினால் ஷர்துல் தாக்குருக்கு வாய்ப்பளிக்கப்படும். மேலும், இங்கிலாந்தில் விளையாடிய விஹாரி, அணியில் இடம்பெறவில்லை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory