» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
இளம் வீரர்களுக்கு வாய்ப்பு ஏன்? விராட் கோலி விளக்கம்
புதன் 3, அக்டோபர் 2018 4:44:29 PM (IST)
உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதால் இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு , வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என கேப்டன் கோலி விளக்கம் அளித்துள்ளார்.

இந்நிலையில், இந்த தொடர் குறித்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய கேப்டன் விராட் கோலி கூறியதாவது: ஹனுமா விஹாரி, பிருத்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் போன்ற இளம் வீரர்கள், உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதால் இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. எனவே அவர்கள் இந்த தொடரை சிறந்த வாய்ப்பாக கருதி சிறப்பாக செயல்பட வேண்டும். முதல் தொடர் என்பதால் எவ்வித அழுத்தத்துக்கும் உட்படக்கூடாது. இந்திய அணியில் இடம்பிடித்து மிக நீண்ட காலம் விளையாட இது ஒரு அரிய வாய்ப்பாகும்.
இந்த தொடரை ஒரு மைல்கல்லை ஏற்படுத்தும் நல்ல வாய்ப்பாகவே நாங்கள் கருதுகிறோம். சில இளம் வீரர்கள் இந்திய அணியில் இடம்பிடித்துள்ள நிலையில், அவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த இது சிறந்த வாய்ப்பாக அமையும். ஏனென்றால் இது அவர்களுக்குதான் நல்ல வாய்ப்பாக அமையும் என்று நான் கருதுகிறேன் என்று பேசினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடர்.. இந்திய அணி அறிவிப்பு: தினேஷ் கார்த்திக் நீக்கம்
சனி 16, பிப்ரவரி 2019 11:43:46 AM (IST)

ஜோய் ரூட்டை தகாத வார்த்தைகளால் திட்டிய கேப்ரியலுக்கு 4 போட்டிகளில் தடை: ஐசிசி அதிரடி
வியாழன் 14, பிப்ரவரி 2019 3:46:38 PM (IST)

ரிஷப் பந்தை தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க வேண்டும்: ஷேன் வார்னே யோசனை
வியாழன் 14, பிப்ரவரி 2019 12:50:55 PM (IST)

இந்தியாவை வீழ்த்தி வரலாறு படைப்போம்: பாக் முன்னாள் கேப்டன் மொயின் கான் சவால்!!
புதன் 13, பிப்ரவரி 2019 3:27:24 PM (IST)

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர் : 24ஆம் தேதி தொடக்கம் !
செவ்வாய் 12, பிப்ரவரி 2019 5:11:13 PM (IST)

ஐசிசி டி20 தரவரிசை: 2 -ஆவது இடத்தில் இந்திய அணி; குல்தீப் யாதவ்
செவ்வாய் 12, பிப்ரவரி 2019 5:06:49 PM (IST)
