» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

முதல் இன்னிங்ஸிலேயே அதிரடி சதம் : முத்திரை பதித்துள்ள பிருத்வி ஷா

வியாழன் 4, அக்டோபர் 2018 12:46:29 PM (IST)மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸிலேயே அதிரடியாக சதம் அடித்து முத்திரை பதித்துள்ளார் இளம் வீரர் பிருத்வி ஷா.

ஜாசன் ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு வந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டி, குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று தொடங்கியுள்ளது. டாஸ் வென்ற கோலி, பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் அஸ்வின், ஜடேஜா, குல்தீப் ஆகிய மூன்று சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளார்கள். டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். இதையடுத்து ராகுலும் பிரித்வி ஷாவும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். 

அறிமுக போட்டியில் ஆடிவரும் பிரித்வி ஷா, வெஸ்ட் இண்டீஸின் பவுலிங்கை பந்தாடி பவுண்டரிகளை விளாசிவருகிறார். பயமோ பதற்றமோ இல்லாமல் தொடக்கம் முதலே அடித்து ஆடிய பிரித்வி ஷா, அறிமுக போட்டியிலேயே அரைசதம் கடந்தார். அவரைத் தொடர்ந்து புஜாராவும் அரைசதம் கடந்தார். வழக்கமாக நிதானமாக ஆடி பொறுமையாக ரன்களை சேர்க்கும் புஜாரா, இந்த போட்டியில் அடித்து ஆடி ரன்களை சேர்த்துவருகிறார். முதல் நாள் உணவு இடைவேளை வரை இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்திருந்தது. உணவு இடைவேளை வரை பிரித்வி ஷா 75 ரன்களும் புஜாரா 56 ரன்களும் எடுத்திருந்தனர்.

உணவு இடைவேளைக்குப் பின் ஆட்டத்தை தொடர்ந்த இந்த ஜோடி மீண்டும் ரன்களை குவிக்க தொடங்கியது. உணவு இடைவேளை முடிந்து வந்ததும் பவுண்டரியுடன் ஆட்டத்தை தொடங்கிய பிரித்வி, தொடர்ந்து சிறப்பாக ஆடி, அறிமுக போட்டியிலேயே சதம் விளாசினார். 99 பந்துகளில் சதம் அடித்தார் பிரித்வி ஷா. 15 பவுண்டரிகளை விளாசி சதமடித்தார். தனது முதல் டெஸ்ட் போட்டியை விளையாடும் 18 வயது பிருத்வி ஷா அற்புதமாக விளையாடி ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory