» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

முதல் போட்டியிலேயே சதம் அடித்த பிரித்வி ஷா

வியாழன் 4, அக்டோபர் 2018 2:14:24 PM (IST)
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய தொடக்க வீரர் பிரித்வி ஷா சதம் அடித்து சாதித்துள்ளார். 

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 டெஸ்ட், 5 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் இன்று தொடங்கி நடைப்பெறுகிறது. இந்த போட்டியில், இந்திய அணியில் 18 வயதே ஆன பிரித்வி ஷா அறிமுகமானார். அறிமுகப்போட்டியிலேயே அரைசதம் அடித்த இளம் வீரர் என்ற சாதனையை பதிவு செய்த பிரித்வி ஷா, தொடர்ந்து சதம் அடித்த இளம் வீரர் பட்டியலிலும் இடம்பெற்றார். 154 பந்துகளை சந்தித்த ஷா 134 ரன்கள் எடுத்து பிஷூ பந்தில் ஆட்டமிழந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory