» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டெஸ்ட் போட்டியில் ஜடேஜா முதல் சதம்; 3வது ஆண்டாக தொடர்ச்சியாக கோலி 1000 ரன்கள்

வெள்ளி 5, அக்டோபர் 2018 3:50:17 PM (IST)ராஜ்கோட் டெஸ்ட் போட்டியில் கோலியைத் தொடர்ந்து சதமெடுத்த ஜடேஜா டெஸ்ட் வாழ்வில் தன் முதல் சதத்தை எடுத்தார். 132 பந்துகளில் 5 பவுண்டரிகள் 5 சிக்சர்களுடன் அவர் 100 ரன்களை எடுத்தார். 

இந்தியாவுக்கு வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன் முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் புதுவரவாக மும்பையை சேர்ந்த 18 வயதான பிரித்வி ஷா இடம் பிடித்தார். முதல் போட்டியில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிரித்வி ஷா 99 பந்துகளில் சதத்தை எட்டினார். இதன் மூலம் அறிமுக போட்டியிலேயே சதத்தை சுவைத்த இளம் வீரர் என்ற சிறப்பை பெற்றார். 

முதல் நாளில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி ஆட்டநேர முடிவில் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 364 ரன்கள் குவித்துள்ளது. கேப்டன் விராட் கோலி 72 ரன்களுடனும் விக்கெட் கீப்பர் ரிஷாப் பான்ட் 17 ரன்களுடனும் களத்தி இருந்தனர். இன்று இரண்டாவது நாள் ஆட்டம் தொடங்கியது. இன்று  வீராட் கோலி சதம் அடித்தார். 200 பந்துகளை சந்தித்து கோலி111 ரன்களை எடுத்து உள்ளார்.இது கோலியின் 24 சதமாகும்.  தற்போது விளையாடி வரும் கிரிக்கெட் வீரர்களில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டி என அனைத்து வகைப் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடும் வீரர்களில் தலை சிறந்த வீரராக கோலி உள்ளார். 

இதுவரை இந்த ஆண்டில் 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள கோலி அடிக்கும் 4 வது சதம் இதுவாகும். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிராக அவரது இரண்டாவது சதமாகும்.இந்த சதத்தின் மூலம் குறைந்த இன்னிங்ஸில் 24 சதங்களை அடித்த வீரர்கள் வரிசையில் சச்சினை முந்தியுள்ளார். சச்சின் 125 இன்னிங்ஸ்களில் 24 சதம் அடித்துள்ளார். கோலி 123 இன்னிங்ஸ்களில் 24 வது சதத்தை அடித்துள்ளார். டான் பிராட்மேன் 66 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை செய்து முதலிடத்தில் உள்ளார்.  மேலும் 3வது ஆண்டாக தொடர்ச்சியாக கோலி 1000 ரன்கள் கடந்து கோலி சாதனை படைத்தார். இதன் பின்னர் ஜடேஜா அதிரடியாக ஆடி சதம் அடித்தார். 8 விக்கெட்டுகள் விழுந்து விட்டன. ஆனால் ஜடேஜா அவசரமாகவே ஆடினார், அரைசதத்துக்குப் பிறகு சிக்ஸ் விளாசினார். இந்த முதல் சிக்ஸருக்குப் பிறகு 4 சிக்சர்கள் விளாசி சதத்துக்கு அடுத்த 34 பந்துகளில் விரைந்தார். மே.இ.தீவுகள் கேப்டன்சியில் எந்த ஒரு தடுப்பும் இல்லை, தாக்குதலும் இல்லை, ஜடேஜாவை சதமெடுக்க விட்டனர் என்றே கூற வேண்டும். ஒரு நெருக்கடியையும் மே.இ.தீவுகள் ஒருவருக்கும் கொடுக்கவில்லை. ஏதோ ஜடேஜாவுக்கு அவர் சொந்த மண்ணில் முதல் சதம் எடுக்கும் வாய்ப்பை பெற்றார். கடைசியில் உமேஷ் யாதவ் 2 சிக்சர்களுடன் 22 ரன்கள் எடுத்தார். எப்போதடா டிக்ளேர் செய்வார்கள் என்று களைப்படைந்திருந்த மே.இ.தீவுகள் அணிக்கு நிம்மதியளிக்குமாறு கோலி 649/9 என்று டிக்ளேர் செய்தார். மே.இ.தீவுகள் 4 விக்கெட்டுகளை இழந்து பரிதாபமாக ஆடிவருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory