» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மே.இ. தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்தியா இன்னிங்ஸ் வெற்றி

சனி 6, அக்டோபர் 2018 4:24:38 PM (IST)மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி ராஜ்கோட் எஸ்சிஏ மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளுக்கு 649 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. விராட் கோலி 139, பிருத்வி ஷா 134, ரவீந்திர ஜடேஜா 100* சதங்கள் குவித்தனர். ரிஷப் பண்ட் 92, புஜாரா 86 ரன்கள் சேர்த்தனர். 

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி 181 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ரோஸ்டன் சேஸ் 53, கீமோ பால் 47 ரன்கள் சேர்த்தனர். இந்திய தரப்பில் அஸ்வின் 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இந்நிலையில், 468 ரன்கள் பின்தங்கிய நிலையில், மேற்கிந்திய தீவுகள் அணி ஃபாலோ ஆன் பெற்று 2-ஆவது இன்னிங்ஸை விளையாடியது. அதிகபட்சமாக போராடிய துவக்க வீரர் கீரன் பவல் அதிரடியாக ஆடி 83 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். 

இந்திய அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஜடேஜா 3, அஸ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனால் மே.இ.தீவுகள் அணி தனது 2-ஆவது இன்னிங்ஸில் 196 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.  3-ஆம் நாளில் முடிவடைந்த இந்த டெஸ்டில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. ஆட்டநாயகனாக ப்ரித்விஷா தேர்வு செய்யப்பட்டார். 2-ஆவது டெஸ்ட் போட்டி அக்.12-ஆம் தேதி நடைபெறவுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory