» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஐபிஎல் பணம்தான் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டை நாசமாக்கியது: கார்ல் ஹூப்பர் கடும் விமர்சனம்!!

சனி 6, அக்டோபர் 2018 4:39:49 PM (IST)வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி தற்போது மிகவும் மோசமான சூழ்நிலையில் இருப்பதற்கு ஐபிஎல்தான் காரணம் என அந்த அணியின் முன்னாள் வீரர் கார்ல் ஹூப்பர் குற்றம் சாட்டியுள்ளார் .

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் கடந்த பல வருடங்களாக சம்பளம் மற்றும் ஒப்பந்தம் தொடர்பான பிரச்சனைகள் உள்ளன. அதற்கு முக்கிய காரணம், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் சம்பளம் மிக குறைவு. அதே சமயம் ஐபிஎல் போன்ற தொடர்களில் கிடைக்கும் பணம் அவர்கள் தரும் சம்பளத்தை விட பல மடங்கு அதிகம். இதனால், வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட மறுத்து வருகிறார்கள்.  

வெறும் ஆறு வாரம் நடக்கும் ஐபிஎல் தொடரால் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர்கள் சொந்த அணிக்கு விளையாட மறுக்கிறார்கள். "கடந்த ஐந்து ஆண்டுகளில் இருந்ததை விட இப்போது டி20 லீக்-களின் எண்ணிக்கை அதிகம். இது வெஸ்ட் இண்டீஸை மிகவும் பாதிக்கும். பல இளம் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஏதாவது ஒரு ஐபிஎல் அணியில் இடம் பிடிக்க வேண்டும் என்பதையே உச்சகட்ட குறிக்கோளாக வைத்துள்ளனர். ஐபிஎல் வெறும் ஆறு வாரங்கள் மட்டுமே. ஆனால், எங்கள் அணியில் சுனில் நரைன் கடைசியாக 2013இல் டெஸ்ட் போட்டியில் ஆடினார். 

அப்போது அவர் 6 விக்கெட்கள் வீழ்த்தினார். அதன் பின் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அவர் டெஸ்டில் ஆடவில்லை. அதே போலவே கெயில் மற்றும் பொல்லார்ட்டும் இருக்கின்றனர். "இந்தியாவில் முதல் தர கிரிக்கெட் நல்ல நிலையில் உள்ளது. அதனால் தான் உங்களால், இளம் வயதில் ப்ரித்வி ஷாவை சர்வதேச போட்டியில் சோதித்து பார்க்க முடிகிறது. ஆனால், எங்கள் கிரிக்கெட்டில் அண்டர் 16 மற்றும் அண்டர் 19 அளவில் நாங்கள் பெரிய அளவில் வேலை செய்ய வேண்டி இருக்கிறது" என கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory