» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: கோலி, பும்ரா முதலிடம்

செவ்வாய் 9, அக்டோபர் 2018 5:36:18 PM (IST)சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒரு நாள் தரவரிசைப் பட்டியலில் இந்திய வீரர்கள் விராட் கோலி, பும்ரா ஆகியோர் முதலிடத்தில் உள்ளனர்.

பேட்ஸ்மேன் வரிசையில் கோலி 884 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். ரோஹித் சர்மா 842 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், 802 புள்ளிகளுடன் ஷிகர் தவன் 5-ஆம் இடத்திலும் உள்ளனர். பெளலர்களில் இந்தியாவின் ஜஸ்ப்ரீத் பும்ரா 797 புள்ளிகளுடன் முதலிடத்திலும், சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் 700 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். ஆப்கன் வீரர் ரஷித் கான் இரண்டாம் இடத்திலும், இந்திய வீரர் சஹால் 11-ஆவது இடத்திலும் உள்ளனர்.

அணிகள் தரவரிசையில் இங்கிலாந்து 127 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியா 122 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன. இலங்கை-இங்கிலாந்து ஒருநாள் தொடரில் கிடைக்கும் முடிவைப் பொறுத்து இதில் மாற்றம் ஏற்படும். மேற்கிந்திய தீவுகளுடன் ஒரு நாள் தொடரில் இந்தியா வென்றால் முதலிடத்தை பிடிக்கவாய்ப்பு கிட்டும். இலங்கையை வென்றால் இங்கிலாந்து தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Tirunelveli Business Directory