» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சேவாக்குடன், பிரித்வி ஷாவை ஒப்பிட வேண்டாம்: கவுதம் கம்பீர் வேண்டுகோள்

வியாழன் 11, அக்டோபர் 2018 5:14:04 PM (IST)மிகச்சிறந்த வீரரும், தொடக்க ஆட்டக்காரருமான வீரேந்திர சேவாக்குடன், இளம் வீரர் பிரித்வி ஷாவை ஒப்பிடுவதற்கு முன் சிந்தித்து செயல்படுங்கள் என்று மூத்த வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடந்த தனியார் நிகழ்ச்சியில் மூத்த வீரர் கவுதம் கம்பீர் பங்கேற்றார். அப்போது அவர் பல்வேறு விஷயங்கள் குறித்து நிருபர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:இளம் வீரர் பிரித்வி ஷாவையும், மிகச்சிறந்த வீரரும், தொடக்க ஆட்டக்காரருமான வீரேந்திர சேவாக்கையும் ஒப்பிட்டுப் பேசுபவர்கள் பேசுவதற்கு முன் சிந்தித்து பேசுவதும், செயல்படுவதும் அவசியம். உண்மையில், யாரையும், யாருடனும் ஒப்பிட்டுப் பேசக்கூடாது, பார்க்கவும் கூடாது. பிரித்வி ஷா கிரிக்கெட்டில் இப்போதுதான் தனது வாழ்க்கையைத் தொடங்கி இருக்கிறார்.

இன்னும் அவர் நீண்ட காலம் பயணிக்க வேண்டியிருக்கிறது. பிரித்வி ஷாவுக்கென தனித்துவம் இருக்கிறது, சேவாக்குக்கு தனித்துவம் இருக்கிறது. சேவாக் 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடிய அனுபவம் மிக்க வீரர். ஆதலால், இந்த ஒப்பீடுகளில் நான் நம்பிக்கை வைப்பதில்லை. பிரித்வி ஷா சிறந்தவீரர், அதிகமான திறமைகள் உள்ளவர். இப்போதுதான் அவரின் டெஸ்ட் போட்டி வாழ்க்கை தொடங்கி இருக்கிறது, இன்னும் அவர்முன் ஏராளமான சவால்கள், சாதனைகளும் காத்திருக்கின்றன.

ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணிக்கு மிகப்பெரிய சவால்கள் காத்திருக்கின்றன. ஆஸ்திரேலிய அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களான ஸ்மித், வார்னர் இல்லாத நிலையில் கூட அவர்களின் பவுலிங் திறமையைப் பேச வேண்டிய அவசியம் இருக்கிறது. இப்போதும் அவர்களின் பேட்டிங்திறமை உள்நாட்டில் சிறப்பாக இருக்கும் ஷான் மார்ஷ், ஆரோன் பிஞ்ச் ஆகியோரின் பேட்டிங், அவர்களின் பந்துவீச்சும் எந்த அணிக்கும் அச்சுறுத்தலாக இருக்கும். அவர்களுக்கு உகந்த ஆடுகளமும், காலநிலையும் இருப்பதால், சிறப்பாக விளையாடுவார்கள், சுழற்பந்துவீச்சிலும் நாதன் லயன் அனைத்து அணிகளுக்கு அச்சுறுத்தல் விடுக்கிறார்.

ஆஸ்திரேலியாவுக்குச் செல்வது என்பது இந்திய அணிக்கு நிச்சயம் ஆடை அலங்கார அணிவகுப்பில் நடக்கும் கேக்வாக் போன்று இருக்காது. ஆஸ்திரேலிய அணி எப்போதும் ஆஸ்திரேலியாவாகவே இருப்பார்கள், அவர்களின் பேட்டிங், பந்துவீச்சு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இந்திய அணிக்கு அமையும். தோனிக்கு பதிலாக ஒருநாள் போட்டியில் பிரித்வி ஷா வருவதற்குச் சரியான நேரம் இதுதானா எனக்குத் தெரியாது. சரியான நேரமும் இல்லை அல்லது தவறான நேரமும் இல்லை. இது கூட்டணியைப் பொறுத்தும், நாம் எப்படிச் செயல்படுகிறோம் என்பதைப் பொறுத்தும் அமையும். இதில் வயதுஒரு பொருட்டு அல்ல. உங்களுக்கு 36 வயதாகிறதா, 47 வயதாகிறதா என்பது முக்கியமல்ல, நீங்கள் சிறப்பாக பேட் செய்து உங்களின் திறமையை நீருபித்தால் உங்களுக்கு உரிய இடம் இருக்கும் இவ்வாறு கம்பீர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory