» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஒருநாள் தொடர்... 2 போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிப்பு : ரிஷப் உள்ளே... தினேஷ் கார்த்திக் வெளியே!!

வியாழன் 11, அக்டோபர் 2018 9:50:43 PM (IST)மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா சுற்றுப்பயணம் செய்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடுகிறது. தற்போது 2 டெஸ்ட் போட்டித் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிகப்பெரிய வெற்றிபெற்றதையடுத்து 2-வது டெஸ்ட் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெறுகிறது. பின்னர் 5 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் நடைபெறவுள்ளன. 

இந்நிலையில், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணி வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது. இதில் ஆசியக் கோப்பையில் கேப்டனாக செயல்பட்ட ரோஹித் ஷர்மா துணைக் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஆசியக் கோப்பையில் இடம்பிடித்திருந்த தினேஷ் கார்த்திக் பதிலாக ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டுள்ளார். 

இந்திய அணி விவரம் பின்வருமாறு: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் ஷர்மா (துணைக்கேப்டன்), ஷிகர் தவன், அம்பத்தி ராயுடு, மணீஷ் பாண்டே, எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ், முகமது ஷமி, கலீல் அகமது, ஷர்துல் தாக்கூர், கே.எல்.ராகுல்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory