» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ராஸ்டன் சேஸ் 98 நாட் அவுட்: சரிவிலிருந்து மீண்ட விண்டிஸ்!!

வெள்ளி 12, அக்டோபர் 2018 5:31:56 PM (IST)ஹைதராபாத் டெஸ்ட் போட்டியில் மே.இ.தீவுகள் அணி முதல்நாள் முடிவில் 7விக்கெட்டுகள் இழப்புக்கு 295 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியாவுக்கு வந்துள்ள  மே.இ.தீவுகள் கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. ராஜ்கோட்டில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் 2-வது டெஸ்ட் ஐதராபாத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தார் மே.இ.தீவுகள் கேப்டன்  ஜேசன் ஹோல்டர். 

இந்திய அணியில் ஷமிக்கு பதில் வந்த ஷர்துல் தாக்கூர் 1.4 ஓவர்கள் வீசி 9 ரன்களில் காயம் காரணமாக வெளியேறினார். மே.இ.தீவுகள் அணியின் விக்கெட்டுகள் மளமளென வீழ்ந்தாலும், ராஸ்டன் சேஸ் 98 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். அவருக்கு நல்ல ஒத்துழைப்பை வழங்கிய கேப்டன் ஹோல்டர் 52 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்திய அணி சார்பில் குல்தீப், உமேஷ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், அஸ்வின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். முதல்நாள் ஆட்ட நேரமுடிவில் மே.இ.தீவுகள் அணி முதல்நாள் முடிவில் 7விக்கெட்டுகள் இழப்புக்கு 295 ரன்கள் எடுத்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory