» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டெல்டாவை காப்பாற்றுங்கள் : சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் தமிழர்களின் குரல்!!

திங்கள் 26, நவம்பர் 2018 5:33:53 PM (IST)கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களைக் காப்பாற்றுங்கள் என  சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் பதாகைகளை ஏந்தி தமிழர்கள் கவனம் ஈர்த்துள்ளார்கள் .

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நேற்று நடைபெற்ற 3-ஆவது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 3 ஆட்டங்களைக் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனானது. ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள டெல்டா மாவட்டங்களைக் காப்பாற்றுங்கள் என மைதானத்தில் இருந்த தமிழ்சுடர், பாலாஜி, வீரமணி, சிவராஜ் ஆகிய நான்கு தமிழ் இளைஞர்கள் பதாகைகளை ஏந்தி கவனம் ஈர்த்துள்ளார்கள். மேலும் கஜா புயலுக்கு நிதியுதவி கோரும் வாசகங்களும் பதாகைகளில் இடம்பெற்றன. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory