» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

அவமானத்தால் நொறுங்கி போய் இருக்கிறேன் : மிதாலி ராஜ் வேதனை

செவ்வாய் 27, நவம்பர் 2018 8:42:29 PM (IST)

மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நீக்கப்பட்டது குறித்து மிதாலி ராஜ் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதிகாரம் படைத்த சிலர் தன்னை அழிக்கப்பார்க்கின்றனர் இதனால் தாம் அவமானத்தால் நொறுங்கி போய் உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார் .

மேற்கிந்திய தீவில் நடைபெற்ற ஐ.சி.சி மகளிர் டி20யின் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது இந்தியா. இந்த ஆட்டத்தில் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த பிரச்னை தொடர்பாக பி.சி.சி.ஐ நிர்வாகக்குழுவான (சிஏஓ) விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் தனக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது குறித்து மிதாலி ராஜ் பி.சி.சி.ஐ தலைமைச் செயல் அதிகாரி ராகுல் ஜோரி, பொது மேலாளர் சபா கரீம் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதம் எழுதியுள்ளார். 

20 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையில் முதல்முதலாக மன சோர்வடைந்துள்ளேன். அதிகாரத்தில் இருக்கும் சிலர், என்னையும், என் நம்பிக்கையையும் உடைக்க பார்க்கின்றனர். இந்நாட்டுக்கான எனது சேவை உண்மையில் மதிப்புடையதா? என்று எண்ணும் நிலைக்கு நான் தள்ளப்பட்டுள்ளேன். 

என்னை அணியில் இருந்து விடுவிக்கும் பயிற்சியாளரின் முடிவுக்கு ஹர்மன் பிரீத் கவுர் ஆதரவு தெரிவித்ததை மட்டுமே எதிர்த்தேனே தவிர வேறு எதையும் நான் செய்யவில்லை. நாட்டுக்காக உலகக் கோப்பையை வென்றுகொடுக்கவேண்டும் என எண்ணினேன். ஆனால் ஒரு சிறப்பான வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டோம். இந்த அவமானத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நொறுங்கிப்போயுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory