» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

பயிற்சி போட்டியில் ப்ரித்வி ஷா காயம்.. முதல் டெஸ்டில் பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ அறிவிப்பு!!

வெள்ளி 30, நவம்பர் 2018 3:32:16 PM (IST)இந்திய டெஸ்ட் அணியின் துவக்க வீரர் ப்ரித்வி ஷா ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் காயம் காரணமாக பங்கேற்க மாட்டார் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் வரும் 2ஆம் தேதி முதல் இந்தியா - ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் துவங்க உள்ளது. அதற்கு முன்னதாக நடந்த பயிற்சிப் போட்டியில் இளம் வீரர் ப்ரித்வி ஷாவுக்கு இடது கணுக்காலில் ஏற்பட்டுள்ளது. இந்தியா - கிரிக்கெட் ஆஸ்திரேலியா அணிக்கு இடையே டெஸ்ட் தொடருக்கு இந்திய வீரர்கள் தயாராகும் வகையில் பயிற்சிப் போட்டி நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்க்ஸில் இந்தியா பேட்டிங் செய்து முடித்து விட்டு தற்போது பந்து வீசி வருகிறது.

ப்ரித்வி ஷா பீல்டிங் செய்து கொண்டு இருந்த போது மாக்ஸ் பிரையன்ட் என்ற வீரர் உயரே அடித்த பந்தை பவுண்டரி கோட்டுக்கு அருகே பிடிக்க முயற்சி செய்தார் ப்ரித்வி. அப்போது பவுண்டரி எல்லையை தாண்டாமல் இருக்க வேண்டி காலை மடக்கிய போது கணுக்காலில் உள்காயம் ஏற்பட்டது. வலி பொறுக்க முடியமால் ப்ரித்வி ஷா மைதானத்திலேயே அமர்ந்து விட்டார். இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட் பேட்ரிக் அவரை பரிசோதித்து, பின்னர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கே உள்காயம் ஏற்பட்டு இருப்பது உறுதியாகி உள்ளது. திரும்பி வரும்போது காலில் க்ரட்ச் அணிந்து வந்தார் ப்ரித்வி. இதையடுத்து அவரது காயம் குணமாக சில நாட்கள் ஆகலாம் என கருதப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory