» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்தியா - ஆஸ்திரேலியா பயிற்சி ஆட்டம் சமன்

சனி 1, டிசம்பர் 2018 1:38:39 PM (IST)




2வது இன்னிங்ஸில் ராகுல், முரளி விஜய்யின் சிறப்பான ஆட்டத்தால் இந்தியா - ஆஸ்திரேலியா பயிற்சி ஆட்டம் சமனில் முடிந்துள்ளது.

ஆஸ்திரேலியா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டி20, 4 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. 3 டி20 போட்டி தொடர் இந்தியா, ஆஸ்திரேலியா 1-1 வென்றதால் என சமனில் முடிந்தது. டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன் 4 நாள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு இந்திய அணியின் பிரித்வி ஷா 66, புஜாரா 54, கோலி 64, ரஹானே 56,ஹனுமா விஹாரி 53, ரோகித் சர்மா 40 ரன்கள் குவிக்க 358 ரன்களை சேர்த்தது.

பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா அணிக்கு ஆர்சி ஷாட் 74, மேக்ஸ் பிரியாட் 62, ஹேரி நெல்சன் 100, ஆரோன் ஹேர்டில் 86, டேனியல் ஹேலியன் 43 என ஆஸியின் அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாட 544 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது. இந்நிலையில் 2வது இன்னிங்ஸ் விளையாடிய இந்திய அணிக்கு கே.எல் ராகுல் 62, முரளி விஜய்யின் 129 ரன்களால் இந்தியா 2 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்து கே.எல் ராகுல், முரளி விஜய் அவுட்டான நிலையில் போட்டியை முடித்துக் கொள்ளலாம் என ஆஸ்திரேலியா தெரிவித்தது.இதனால் பயிற்சி ஆட்டம் டிராவில் முடிந்தது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd





Tirunelveli Business Directory