» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

உடல் தகுதியை நிரூபிக்க ஹர்திக்பாண்டியாவை அழைத்த பிசிசிஐ

சனி 1, டிசம்பர் 2018 7:57:54 PM (IST)

ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா தன் உடல் தகுதியை நிரூபிக்க தேசிய கிரிக்கெட் வாரியம் அழைத்துள்ளது. 

ஹர்திக் பாண்டியா அண்மையில் முடிந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில், பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பவுலிங் செய்த போது முதுகில் காயம் காரணமாக மைதானத்திலேயே சுருண்டு விழுந்தார். மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். 

தற்போது உடல்நிலை தேறி வந்துள்ள ஹர்திக் பாண்டியா, பவுலிங் மற்றும் பேட்டிங் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில் உடல்தகுதியை நிரூபிக்க வருமாறு ஹர்திக் பாண்டியாவை தேசிய கிரிக்கெட் அகாடமி அழைத்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory