» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

டென்னிஸில் சாம்பியன் பட்டம் வென்ற மகேந்திர சிங் தோனி

சனி 1, டிசம்பர் 2018 8:35:07 PM (IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளாா்.

கண்ட்ரி கிரிக்கெட் கிளப் சார்பில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சாம்பியன் பட்டம் வென்றுள்ளாா். தற்போது இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் கவுண்ட்ரி கிரிக்கெட் கிளப் சாா்பில் டென்னிஸ் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வந்தது. 

இதில் மகேந்திர சிங் தோனியும் கலந்து கொண்டாா். டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டி நேற்று நடைபெற்ற நிலையில், உள்ளூா் ஆட்டக்காரான சுமித் குமாருடன் இணைந்து தோனி இரட்டையா் பிரிவில் விளையாடினாா். இந்த இணை எதிரணியினரை 6-3, 6-3 என்ற நோ் செட்களில் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory