» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

அடிலெய்ட் டெஸ்ட்: ஆஸ்திரேலிய, இந்திய அணிகள் அறிவிப்பு

புதன் 5, டிசம்பர் 2018 12:14:50 PM (IST)நாளை தொடங்க உள்ள அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய, இந்திய அணி வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 4 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடர்களில் பங்கேற்க ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளது. டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிவடைந்தது. இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் நாளை முதல் அடிலெய்டில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் ஆட்டத்துக்கான 11 பேர் கொண்ட அணியை இன்றே அறிவித்துள்ளது ஆஸ்திரேலிய அணி.

ஆஸ்திரேலியா: டிம் பெய்ன் (கேப்டன்), ஆரோன் ஃபிஞ்ச், மார்கஸ் ஹாரிஸ், உஸ்மான் கவாஜா, ஷான் மார்ஷ், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், டிராவிஸ் ஹெட், மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், நாதன் லயன், ஜோஷ் ஹேஸில்வுட்.

இந்திய அணி 12 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. இவர்களில் ரோஹித் சர்மா அல்லது விஹாரி ஆகிய இருவரில் ஒருவர் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. இந்திய அணி வீரர்கள் வருமாறு: விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், லோகேஷ் ராகுல், சேதேஷ்வர் புஜாரா, அஜிங்க்ய ரஹானே, ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், ரவிச்சந்திரன் அஸ்வின், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா, ஹனுமா விஹாரி.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory