» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார் கவுதம் காம்பீர் !!

புதன் 5, டிசம்பர் 2018 5:22:54 PM (IST)



இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்களில் ஒருவரான கவுதம் காம்பீர் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 

இந்திய கிரிக்கெட் அணியில் முன்னணி தொடக்க ஆட்டக்காரராக வலம் வந்த கவுதம் காம்பீர் 2016-ம் ஆண்டுக்கு பிறகு ஓரங்கட்டப்பட்டு விட்டார். ஆனாலும் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார். டெல்லியை சேர்ந்த கம்பீர், விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் சில தினங்களுக்கு முன்பு அரியானாவுக்கு எதிரான கால்இறுதியில் 72 பந்தில் 104 ரன்கள் விளாசி அசத்தினார். 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை இறுதி ஆட்டத்திலும் (75 ரன்), 2011-ம் ஆண்டு ஒரு நாள் போட்டி உலக கோப்பை இறுதி ஆட்டத்திலும் (97 ரன்) கம்பீரின் பங்களிப்பை யாரும் மறந்து விட முடியாது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd






Tirunelveli Business Directory