» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் : ஆஸி.,பவுலர்கள் ஆதிக்கம்

வியாழன் 6, டிசம்பர் 2018 2:08:08 PM (IST)



ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 250 ரன்கள் குவித்துள்ளது. 

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிவருகிறது. முதலில் டி20 தொடர் நடைபெற்ற நிலையில் அது 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதற்கிடையே, இன்று 4 போட்டிகள்கொண்ட டெஸ்ட் தொடர் அடிலெய்டில் தொடங்கியது. முதலில் டாஸ் வென்ற இந்திய அணிக் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

தொடக்க வீரர்களாக களம்புகுந்த முரளி விஜய் - கே.எல்.ராகுல் இணை அதிர்ச்சி கொடுத்தது. இரண்டாவது ஓவரின் கடைசி பந்தில் இரண்டு ரன்களில் கே.எல்.ராகுல் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து விஜய் 11 ரன்களுக்கும், கேப்டன் கோலி 3 ரன்களுக்கும் அவுட் ஆகி வெளியேறினர்.தனது வழக்கமான பொறுமையான ஆட்டத்தால் அணிக்கு உயிர் கொடுத்த புஜாரா சதம் அடித்தார். 

231 பந்துகளில் சதத்தை நிறைவு செய்த அவர், இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தனது 16-வது சதத்தை எட்டி சாதனை படைத்தார். அதேபோல் இந்தப் போட்டியின்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 5000 ரன்கள் என்ற மைல்கல்லையும் எட்டினார். இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் எடுத்தது.  முதல்நாள் ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது. ஷமியும், பும்ராவும் களத்தில் உள்ள நிலையில் நாளை இரண்டாவது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd






Tirunelveli Business Directory