» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

 சிஎஸ்கே பயிற்சி ஆட்டத்தைக் காண 12,000 பேர் குவிந்தனர்! ரசிகருடன் ஓடிபிடித்து விளையாடிய தோனி!!

திங்கள் 18, மார்ச் 2019 12:50:32 PM (IST)சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே வீரர்களுக்கு இடையே நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தைக் காண 12ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் வருகை தந்தார்கள்.

ஐபிஎல் (2019) 12-வது சீசன் போட்டியை முன்னிட்டு முதல் 2 வாரங்களுக்கான அட்டவணையை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது. மார்ச் 23-ம் தேதி நடைபெறவுள்ள தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ஆடுகிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே வீரர்கள் தினமும் பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் நேற்று சிஎஸ்கே வீரர்களுக்கு இடையே நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தைக் காண 12ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் வருகை தந்தார்கள். வலைப்பயிற்சிக்காக தோனி மைதானத்துக்கு வந்தபோதும் பலத்த வரவேற்பு அளித்தார்கள். ரசிகர் ஒருவர் மைதானத்துக்குள் நுழைந்து தோனியைத் தொட முயன்றபோது தோனி தனது வழக்கமான பாணியில் அவருடன் ஓடிப்பிடித்து விளையாடினார். இதன் காணொளிகளை சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Tirunelveli Business Directory