» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

வார்னர் - ஜானி பேர்ஸ்டோ அதிரடி சதம்: பெங்களூரை வென்றது ஐதராபாத்

ஞாயிறு 31, மார்ச் 2019 10:26:44 PM (IST)பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று நடைபெற்ற  11-வது லீக் ஆட்டத்தில், ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.  இதனையடுத்து  முதலில் களமிறங்கிய ஐதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக வார்னர் 100 ரன்கள், பேர்ஸ்டோவ் 114 ரன்கள் எடுத்தனர். அந்த அணியின் தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோ - டேவிட் வார்னர் ஜோடி 3 முறை தொடர்ச்சியாகச் சதக்கூட்டணி அமைத்திருப்பது இதுவே முதல் முறை, அதுவும் தொடக்கக் கூட்டணியாக இதனைச் சாதித்துள்ளது.

இதையடுத்து 232 ரன்கள் என்ற இமாலாய இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணி வீரர்கள், பார்தீவ் பட்டேல் 9 ரன், ஹெட்மையர் 9 ரன், விராட் கோலி 3 ரன், டி வில்லியர்ஸ் 1 ரன், மொயீன் அலி 2 ரன், ஷிவம் டுபே 5 ரன், என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் தங்களது விக்கெட்களை இழந்து வெளியேறினர்.  இதனையடுத்து பெங்களூரு அணி 19.5 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 113 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஐதராபாத் அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக கிராண்ட்ஹோம் 37 ரன்கள் எடுத்தார். பிரயாஸ் பர்மன் 19 ரன்கள், உமேஷ் யாதவ் 14 ரன்கள் எடுத்தனர். ஐதராபாத் அணியில் சிறப்பாக பந்துவீசிய முகமது நபி 4 விக்கெட்கள் மற்றும் சந்தீப் சர்மா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

தமிழ் நடிகையை மணந்தார் மணிஷ் பாண்டே!!

செவ்வாய் 3, டிசம்பர் 2019 5:47:40 PM (IST)

Sponsored Ads
Tirunelveli Business Directory