» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தோனி - பிராவோ அபாரம்: ராஜஸ்தானை வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்

திங்கள் 1, ஏப்ரல் 2019 10:52:24 AM (IST)தோனியின் அபாரமான பேட்டிங், மற்றும் பிராவோவின் திறமையான கடைசி ஓவர் பந்தவீச்சால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 8 ரன்களில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

சென்னையில் நேற்றிரவு நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோனியின் அதிரடியால் சென்னை அணி 175 ரன்களை குவித்தது. தோனி 46 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 75 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன்பிறகு விளையாடிய ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்தது. இதனால் மிகவும் பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது சென்னை அணி. 

தோனியின் அமர்க்களமான பேட்டிங், திருப்புமுனை ஏற்படுத்திய பிராவோவின் கடைசி ஓவர் ஆகியவற்றால், 12-வது ஐபிஎல் போட்டியில் சென்னையில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 8 ரன்களில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இதன் மூலம் சிஎஸ்கே அணி தான் மோதிய 3 ஆட்டங்களிலும் வென்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. அதேசமயம், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 போட்டிகளிலும் விளையாடி மூன்றாவு தோல்வியைச் சந்தித்துள்ளது.

முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் சேர்த்தது. 176 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் மட்டுமே சேர்த்து 8 ரன்களில் தோல்வி அடைந்தது. தலைசிறந்த கேப்டன் என்பதை தோனி இந்த போட்டியில் நிரூபித்துவிட்டார். அணியை இக்கட்டான நேரத்தில் இருந்து வழிநடத்திச் சென்று 46 பந்துகளில் 75 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கேப்டன் தோனி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

30 பந்துகளுக்கு 33 ரன்கள் சேர்த்திருந்த தோனி, ஆட்டம் முடிந்தபோது, 46 பந்துகளுக்கு 75 ரன்கள் சேர்த்தார். அதாவது, 16 பந்துகளில்42 ரன்கள் சேர்த்து தான் எந்தவிதத்திலும் அதிரடியில் குறையவில்லை என்பதை விமர்சகர்களுக்கு நிரூபித்தார். கடைசி 18 பந்துகளில் மட்டும் தோனி, பிராவோ அதிரடியால், சிஎஸ்கோ அணி 60 ரன்களைச் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டியில் அனைத்தும் தோனி மயம் என்றுதான் கூற வேண்டும். 27 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியபோது, களமிறங்கிய தோனி கடைசிவரை நிலைத்து ஆடினார். இதையடுத்து புள்ளிகள் பட்டியலில் சிஎஸ்கே அணி 6 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. இத்துடன் 8 அணிகளும் 3 ஆட்டங்கள் விளையாடியுள்ள நிலையில் சென்னை அணி மட்டுமே ஒரு தோல்வியும் அடையாமல் உள்ளது. கடைசி இடத்தில் பெங்களூர் அணி உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Tirunelveli Business Directory