» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஒரே நேரத்தில் 2 பதவிகள் : கங்குலிக்கு பிசிசிஐ நோட்டீஸ்!!

வியாழன் 4, ஏப்ரல் 2019 4:36:57 PM (IST)

ஆதாயம் பெறும் வகையில் ஒரே நேரத்தில் இரண்டு பதவிகள் தொடர்பான புகாருக்கு விளக்கம் அளிக்கும்படி கங்குலிக்கு பிசிசிஐ நன்னடத்தை அதிகாரி நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பெங்கால் கிரிக்கெட் சங்க தலைவராக உள்ளார். அத்துடன், இந்த ஐ.பி.எல். சீசனுக்கான டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆலோசகராகவும் நியமனம் செய்யப்பட்டார்.  இதையடுத்து கங்குலி ஆதாயம் பெறும் வகையில் ஒரே நேரத்தில் இரண்டு பதவிகள் வகிப்பதாக கொல்கத்தாவை சேர்ந்த 3பேர் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் புகார் அளித்தனர். 

இதைத்தொடர்ந்து இதுபோன்ற புகார்களை விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நன்னடத்தை அதிகாரியான முன்னாள் நீதிபதி டி.கே.ஜெயின், இரட்டை ஆதாயம் சர்ச்சை குறித்து 7 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி கங்குலிக்கு நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வரும் 12ம் தேதி டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. அந்த போட்டியின்போது, மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவரான கங்குலி, எப்படி டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு செயல்பட முடியும்? என்ற கேள்வி எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory