» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

கார் விபத்தில் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீராங்கனை குழந்தையுடன் பலி!!

திங்கள் 8, ஏப்ரல் 2019 5:56:04 PM (IST)

தென்னாப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை ஒருவர், தனது குழந்தையுடன் கார் விபத்தில் உயிரிழந்தார். 

தென்னாப்பிரிக்கா அணிக்காக 4 சர்வதேச போட்டிகளில் விளையாடியவர் 25 வயதான எல்ரைசா தயுனிசன் போரி. 2013ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக்கோப்பைப் போட்டியிலும் அவர் இடம்பெற்று இருந்தார். அவர் தனது குழந்தையுடன் ஸ்டில்பாண்டின்  என்ற நகரில் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த கார் விபத்தில் சிக்கியதாகவும், தாயும், குழந்தையும் உயிரிழந்து விட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். அவரது மறைவு மீளாத்துயரத்தை அளிப்பதாக தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory