» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

மைதானத்திற்குள் வந்து நடுவர்களுடன் கடும் வாக்குவாதம்: தோனிக்கு அபராதம்!!

வெள்ளி 12, ஏப்ரல் 2019 10:54:09 AM (IST)ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விதியை மீறி மைதானத்திற்குள் வந்து நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தோனிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே நேற்று நடைபெற்ற ஐபிஎல் 20 ஓவர் போட்டியில், கடைசி ஓவரில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி வெற்றியை பெற்றது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் போது கடைசி ஓவரில், சென்னை வீரர் சாண்ட்னருக்கு,  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பென்ஸ்டோக்ஸ் வீசினார். புல்டாசாக ஒரு பந்தை பென்ஸ்டோக்ஸ் வீசினார். இந்த பந்தை உடனடியாக நோபாலாக மெயின் அம்பயர் அறிவித்தார். ஆனால், லெக் அம்பயர் நோபால் தர மறுத்தார். 

இதனால், அதிருப்தி அடைந்த சாண்ட்னர் மற்றும் ஜடேஜா ஆகிய இரு பேட்ஸ்மேன்களும் நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வழக்கமாக இது போன்ற இக்கட்டான தருணங்களில், சாந்தமாக இருக்கும் தோனி, நேற்று ஆக்ரோஷப்பட்டார். மைதானத்திற்குள் வந்த தோனி, கள நடுவர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருப்பினும், நடுவர்கள் நோபாலாக அறிவிக்க மறுத்துவிட்டனர். கடைசி பந்தில் சிக்சர் விரட்டி சென்னை அணியை சாண்டனர் வெற்றிக்கு அழைத்துச்சென்றார். கள நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட தோனிக்கு ஐபிஎல் நிர்வாகம் போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் தொகையை அபராதமாக அறிவித்துள்ளது. ஐபிஎல் நன்னடத்தை விதிகளை மீறி விட்டதாக தோனியும் ஒப்புக்கொண்டுள்ளார். 

சிஎஸ்கே  100-வது வெற்றி

சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி நேற்றைய வெற்றியின் மூலம் புதிய சாதனை படைத்தார். சிஎஸ்கே அணிக்கு தலைமை ஏற்றபின் தோனி பெறும் 100-வது வெற்றி இதுவாகும். இதுவரை இந்தச் சாதனையை எந்த ஒரு அணியின் கேப்டனும் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆட்டத்தில் தோனி 43 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள் உள்பட 58 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக தோனி அடிக்கும் 2-வது அரைசதம் இதுவாகும்.

 ஜடேஜா 100-வது விக்கெட்

மேலும், ரவிந்திர ஜடேஜா இந்த போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஸ்மித் விக்கெட்டை வீழ்த்தியபோது, ஐபிஎல் போட்டியில் 100-வது விக்கெட்டை வீழ்த்திய வீரர் எனும் பெருமையை ஜடேஜா பெற்றார். இந்த போட்டயில் தோனியின் பேட்டிங் மிக அற்புதமாக இருந்தது. பவர்ப்ளே ஓவருக்குள் 24 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் களமிறங்கிய தோனி, ‘கேப்டன் கூல்’ என்பதை நிரூபித்துவிட்டார். அணியை விக்கெட் சரிவில் இருந்து கட்டி இழுத்து வெற்றிவரை அழைத்தது வந்து, தன்னை உலக அணிகளில் மிகச்சிறந்த கேப்டன் என்பதை தோனி மீண்டும் உறுதிசெய்துவிட்டார்.  


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

தமிழ் நடிகையை மணந்தார் மணிஷ் பாண்டே!!

செவ்வாய் 3, டிசம்பர் 2019 5:47:40 PM (IST)

Sponsored Ads
Tirunelveli Business Directory