» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தவன் அதிரடியில் கொல்கத்தாவை வீழ்த்தியது டெல்லி: 4-ஆவது இடத்திற்கு முன்னேறியது.

சனி 13, ஏப்ரல் 2019 12:40:36 PM (IST)



தவன் அதிரடியில் கொல்கத்தாவை வீழ்த்திய டெல்லி அணி புள்ளிகள் பட்டியலில் 4-ஆவது இடத்திற்கு முன்னேறியது. 

நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தாவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது டெல்லி அணி. முதலில் ஆடிய கொல்கத்தா 178/7 ரன்களைக் குவித்தது. பின்னர் ஆடிய டெல்லி அணி தவன்-ரிஷப் பந்த் அபார ஆட்டத்தால் 180 ரன்களை எடுத்து வென்றது. தவன் ஆட்டமிழக்காமல் 97 ரன்களும் ரிஷப் பந்த் 46 ரன்களும் எடுத்தார்கள். இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி புள்ளிகள் பட்டியலில் 4-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. தோல்வியடைந்தாலும் ஆரம்பத்தில் பெற்ற வெற்றிகளால் 8 புள்ளிகளுடன் 2-ம் இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது கொல்கத்தா அணி. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd




Tirunelveli Business Directory