» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆல்ரவுண்டராக அஸ்வின் அசத்தல் : ராஜஸ்தானை மீண்டும் வென்றது பஞ்சாப்

புதன் 17, ஏப்ரல் 2019 12:18:11 PM (IST)



ஆல்ரவுண்டராக அஸ்வின் அசத்த, ஐபிஎல் போட்டியின் 32-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 12 ரன்களில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீழ்த்தியது.

முதலில் பேட் செய்த கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் சேர்த்தது. கே.எல். ராகுலின் 47 பந்துகளுக்கு 52 ரன்கள் சேர்த்தது, அஸ்வின் 4 பந்துகளுக்கு 17 ரன்களும், 2 முக்கிய விக்கெட்டுகளையும் வீழ்த்தியது வெற்றிக்கு முத்தாய்ப்பாக அமைந்தது. ஆட்டநாயகன் விருதையும் அஸ்வின் வென்றார். கடைசிநேரத்தில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியின் ஸ்கோர் 160 ரன்களுக்குள் அடங்கிவிடும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 182 ரன்கள் வரை உயர்வதற்கு அஸ்வினின் கடைசிநேர அதிரடியே காரணம். இந்த ரன்களை அடிக்காமல் இருந்திருந்தால், வெற்றி ராஜஸ்தான் அணி பக்கம் சென்றிருக்கும். 

அதேநேரத்தில் ராகுல் ஆட்டமிழந்தநிலையில், பதற்றமடைந்த கிங்ஸ் லெவன் அணி வீரர்கள் 12 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து இக்கட்டான நிலைக்கு சென்றபோது அஸ்வினின் அதிரடி காப்பாற்றியது. 183 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. ஜோஸ் பட்லர், திரிபாதி அதிரடியாக பேட் செய்து நல்ல தொடக்கத்தை அளித்தனர். அர்ஷ்தீப் சிங் வீசிய 5-வது ஓவரில் பட்லர் 23 ரன்கள் சேர்த்தநிலையில் விக்கெட் கீப்பர் நிகோலஸ் பூரன் அருமையாக கேட்ச் பிடித்து பட்லரை பெவிலியன் அனுப்பினார். அடுத்துவந்த சாம்ஸன், திரிபாதியுடன் இணைந்து நிதானமாக விளையாடினார். 

அஸ்வின் வீசிய 12-வது ஓவரில் சாம்ஸன் கிளீன்  போல்டாகி 27 ரன்களில் ஆட்டமிழந்தார். இதுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது. அடுத்து வந்த கேப்டன் ரஹானே, திரிபாதியுடன் இணைந்தாலும் எதிர்பார்த்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. திரிபாதி 44 பந்துகளில் அரைசதம் அடித்தார். அஸ்வின் வீசிய 16-வது ஓவரில் லாங் ஆப் திசையில் அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து திரிபாதி 50 ரன்களில் ஆட்டமிழந்தார்.

பவர்ப்ளே ஓவரில் ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் சேர்த்தது. 18 பந்துகளுக்கு 50 ரன்கள் என்று "குருவி தலையில் பனங்காய்" வைப்பதுபோன்று பேட்ஸ்மேனும் இல்லாமல், ஓவர்களும் இல்லாத நிலையில் நெருக்கடியில் பின்னி களமிறங்கினார். அந்த சூழலிலும் முடிந்தவரை அடித்து ஆடிய பின்னி, 11 பந்துகளில் 33 ரன்கள் அடித்தும் அதுவும் வீணானது. இந்த வெற்றியின் மூலம் 9 ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றிகள், 4 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 4-வது இடத்துக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முன்னேறியுள்ளது. ராஜஸ்தான் அணி  8 போட்டிகளில் 2 வெற்றி, 6 தோல்வி, என 4 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) Ltd



Tirunelveli Business Directory