» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தோல்வியின் விளிம்பில் இருந்து மீண்ட ராஜஸ்தான்: கொல்கத்தா அணிக்கு தொடர்ச்சியாக 6-வது தோல்வி!!

வெள்ளி 26, ஏப்ரல் 2019 12:40:12 PM (IST)கொல்கத்தாவில் நேற்றிரவு நடைபெற்ற நேற்றைய ஆட்டத்தில், தோல்வியின் விளிம்பில் இருந்த ராஜஸ்தான் அணி சிறப்பாக ஆடி 3 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வென்றது. 

முதலில் ஆடிய கொல்கத்தா 175/6 ரன்களை எடுத்த நிலையில், பின்னர் ஆடிய ராஜஸ்தான் 177/7 ரன்களைக் குவித்து வென்றது. 2 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 31 பந்துகளில் 47 ரன்களை விளாசி ரஸ்ஸல் பந்தில் ஹிட் விக்கெட் முறையில் அவுட்டானார் அஸ்ஸாமைச் சேர்ந்த 17 வயது ரியான் பராக். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக 43 ரன்கள் எடுத்த பராக், அப்போதும் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு உதவினார். இதனால் பேட்டிங், பந்துவீச்சு என இரண்டின் வழியாகவும் அணிக்குப் பங்களித்து வருகிறார் இளம் வீரர் பராக். இந்த இரு வெற்றிகளின் மூலம் புதிய மறுவாழ்வு கண்டுள்ளது ராஜஸ்தான் அணி. இந்த வருட ஐபிஎல் போட்டியில், கொல்கத்தா அணியின் நிலைமை திடீரென பரிதாப நிலைக்குச் சென்றுவிட்டது. முதல் 5 ஆட்டங்களில் 4-ல் வெற்றி பெற்று அனைவரும் அச்சப்படும் அணியாக இருந்தது கொல்கத்தா அணி. ஆனால், கடைசி 6 ஆட்டங்களில் அந்த அணி தோல்வியை மட்டுமே சந்தித்துள்ளது. இதனால் புள்ளிகள் பட்டியலில் 8 புள்ளிகளுடன் 6-ம் இடத்தில் உள்ளது. ராஜஸ்தான், பெங்களூர் அணிகளும் தலா 8 புள்ளிகளுடன் முறையே 7-ம் மற்றும் 8-ம் இடங்களில் உள்ளன. இதனால் இந்த மூன்று அணிகளுக்கும் கடைசி 3 ஆட்டங்களும் முக்கியமாக உள்ளன. அந்த மூன்றில் ஒன்றில் தோற்றாலும் போட்டியிலிருந்து வெளியேறவேண்டியதுதான். சமீபகாலமாக தினேஷ் கார்த்திக் 50 பந்துகளில் 9 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 97 ரன்கள் அடித்தும் அவரால் அணியின் தோல்வியைத் தடுக்க முடியாமல் போனது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

தமிழ் நடிகையை மணந்தார் மணிஷ் பாண்டே!!

செவ்வாய் 3, டிசம்பர் 2019 5:47:40 PM (IST)

Sponsored Ads
Tirunelveli Business Directory