» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

தோனி இல்லாத சென்னை அணி மீண்டும் தோல்வி : 2ஆம் இடத்துக்கு முன்னேறியது மும்பை அணி!!

சனி 27, ஏப்ரல் 2019 11:52:40 AM (IST)ஐபிஎல் தொடரின் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் தோனி இல்லாத சென்னை அணியை எளிதாக வீழ்த்தி புள்ளி பட்டியலில் 2-ம் இடத்துக்கு முன்னேறியது மும்பை.

சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நேற்றிரவு நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதற்கிடையே சென்னை அணியின் கேப்டன் தோனிக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் அவருக்கு ஓய்வு தரப்பட்டது. கடந்த 2010-க்கு பின் இரண்டாவது முறையாக சென்னை அணி சார்பில் ஆடாமல் உள்ளார் தோனி என்பது குறிப்பிடத்தக்கது. 

அவருக்குப் பதிலாக சுரேஷ் ரெய்னா தற்காலிக கேப்டனாக செயல்பட்டார். அதே போல் டூபிளெஸிஸ், ஜடேஜா ஆகியோரும் ஆடவில்லை. முரளி விஜய், ஷோரே அணியில் சேர்க்கப்பட்டார்கள். முதலில் விளையாடிய மும்பை இந்தியன்ஸ், 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 155 ரன்களைக் குவித்தது. ஆனால் மோசமான பேட்டிங்கினால், 15 பந்துகள் மீதமிருக்க, 17.4 ஓவர்களிலேயே 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது சென்னை. இந்த வருட ஐபிஎல் போட்டியில், சொந்த மைதானத்தில் தோல்வியே பெறாமல் இருந்த சென்னை தற்போது மும்பையிடம் தோல்வியைத் தழுவியது.

இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி புள்ளிகள் பட்டியலில் 14 புள்ளிகளுடன் 2-ம் இடத்துக்கு முன்னேறியுள்ளது. அந்த அணிக்கு இன்னும் 3 ஆட்டங்கள் மீதமுள்ளதால் பிளேஆஃப்புக்குத் தகுதி பெறுவது தற்போது எளிதாகிவிட்டது. சென்னை அணி 16 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. எனினும் இன்னும் ஒரு வெற்றி பெற்றால் மட்டுமே புள்ளிகள் பட்டியலில் முதல் இரு இடங்களில் ஒன்றைப் பிடிக்கமுடியும். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory