» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஜடேஜா, ஷமி, பும்ராவுக்கு அர்ஜுனா விருது: மத்திய அரசுக்கு பரிந்துரை

சனி 27, ஏப்ரல் 2019 5:48:44 PM (IST)கிரிக்கெட் வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா, பூனம் யாதவ் ஆகியோர், அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

விளையாட்டுத் துறைகளில் சிறந்த சாதனை படைக்கும் வீரர் வீராங்கனைளுக்கு, மத்திய அரசு சார்பில் அர்ஜுனா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது. இந்த விருதுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு, வில்வித்தையில் சிறந்த வீரரான அர்ஜுனனின் வெங்கலச் சிலையோடு, ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டு பத்திரம் வழங்கப்படுகிறது.

இந்த விருதுக்கு அந்தந்த விளையாட்டு அமைப்புகள் சார்பில் தகுதிவாய்ந்த வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான அர்ஜுனா விருதுக்கு, கிரிக்கெட் வீரர்கள் ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, ஜஸ்ப்ரித் பும்ரா, பூனம் யாதவ் ஆகியோரின் பெயர்களை பிசிசிஐ இன்று பரிந்துரை செய்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Sterlite Industries (I) Ltd
Tirunelveli Business Directory