» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துக்கு ரூ.15 லட்சம் பரிசு: அதிமுக அறிவிப்பு

செவ்வாய் 30, ஏப்ரல் 2019 11:46:14 AM (IST)

ஆசிய தடகள போட்டியில் தங்கபதக்கம் வென்ற கோமதி மாரிமுத்துக்கு அதிமுக ரூ.15 லட்சம் பரிசு அறிவித்துள்ளது. 

கத்தார் தலைநகர் தோஹாவில் 23வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டிகள் கடந்த வாரம் நடைபெற்றது. இதில், தடகளப்  போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், திருச்சியைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கம் வென்று சாதனை படைத்தார். வீராங்கனை கோமதியின் சாதனைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

அவருக்கு, திமுக சார்பில் ரூ.10 லட்சம், காங்கிரஸ் கட்சி சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டது. அதே போன்று பிரபலங்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பில் அவருக்கு நிதியுதவி தரவும் முன்வந்துள்ளனர். இந்நிலையில் கோமதிக்கு அதிமுக சார்பில் ரூ. 15 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் 4x400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளி வென்ற ஆரோக்கிய ராஜீவுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என அதிமுக அறிவித்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Sterlite Industries (I) LtdTirunelveli Business Directory